உலக தைராய்டு நாள் ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் தைராய்டு பாதிப்பு – அறிகுறிகள் என்ன?

சென்னை, மே 25- இன்று (மே 25) உலக தைராய்டு நாள் கடைபிடிக்கப்படுகிறது. உடலின் முக்கிய சுரப்பிகளில் ஒன்றான தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

உடலில் அயோடின் சத்து குறைவாக இருப்பது தைராய்டு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மருத்துவ ஆய்வுகளின்படி, இந்த தைராய்டு தொடர்பான பாதிப்புகள் ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களுக்கே மிக அதிகமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹைப்போதைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் போது ஏற்படும் ‘ஹைப்போ-தைராய்டிசம்’ பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகப் பின்வருபவை பட்டியலிடப்பட்டுள்ளன:

உடல் பருமன் (திடீரென உடல் எடை அதிகரிப்பது) முகம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுவது எப்போதும் சோர்வாகவும், சுறுசுறுப்பின்றியும் உணர்வது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் அதிகப்படியான முடி உதிர்தல் பிரச்சினை தைராய்டு பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான உணவுப் பழக்கம் மற்றும் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இதனை எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *