சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தாயாருக்குத் தெரியாமலே எரித்த த.வெ.க. அரசு! துக்க வீட்டில் ‘ரீல்ஸ்’ போட்டுக் குதூகலிக்கும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்!

2 Min Read

கோவை, மே 25– கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்திருப்பதுடன், ரீல்ஸ் ஆட்சியின் ரியல் காட்சிகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

பத்து நாள்களிலேயே புதிய ஆட்சியின் நிர்வாக அவலட்சணம் வெளிப்பட்டு இருப்பதுடன் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற நிலை யில், சிறுமி படுகொலையின் பின்ன ணியில் உள்ள உண்மைகளை மறைக்க ஆட்சி நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலைக்குச் சென்று இருக்கிறது என்பதை சிறுமியின் சித்தி வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாலியல் கொலை குற்ற வாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தால்தான் சிறுமியின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொள்வோம் என்று அவர்களது குடும்பம் உறுதியாக இருந்தது. மே 23 ஒரு நாள் முழுவதும் முதலமைச்சரிடம் இருந்து எந்த உத்தரவாதமும் அறிவிப்பு வராத நிலையில், அரசு அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி, உடலை வாங்கிக் கொள்ள கையெழுத்து போடுமாறு நெருக்கடி கொடுத்து இருக்கிறார்கள். சிறுமியின் தாய் கடைசி வரை மறுத்துவிட்ட நிலையில், தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று மிரட்டியும், நிதி உதவி உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்று ஆசை காட்டியும் கையெழுத்து வாங்கி, சிறுமி யின் உடலை உடனடியாக எரிக்கச் செய்து விட்டார்கள்.

தான் பெற்ற குழந்தையின் உடல் எரிக்கப்பட்டது அந்த தாய்க்கே தெரியவில்லை. பாலி யல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கிற குழந்தையின் உடலை புதைப்பது தான் சரியாக இருக்கும் என்றும், நாளை விசாரணையில் ஏதேனும் சந்தேகம் வந்தாலும் உடலை மீண்டும் பரிசோதனை செய்வதற்கு அது வாய்ப்பாக இருக்கும் என்று சிறுமியின் உறவினர்கள் பலர் தெரி வித்தும், அதிகாரிகள் கொடுத்த நெருக்க டியினால் சிறுமியின் உடலை அவசர அவசரமாக எரித்திருக்கிறார்கள்.

இது குறித்த பகிரங்கமான குற்றச்சாட்டை குழந்தையின் சித்தி ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

பாஜக ஆட்சி நடைபெறும் உத்த ரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற ஊரில் 2020 ஆம் ஆண்டு ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து நீதி கோரியதால், பாஜக அரசின் காவல்துறையினரே, சிறுமியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இதனால் அந்தக் கொடூர குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பி விட்டார்கள்.

உ.பி. பா.ஜ.க. அரசின்
பாணியில்!

உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசின் பாணியில், தமிழ்நாட்டில் தவெக அரசு சட்டம் – ஒழுங்கை சீரழித்து, உண்மை குற்றவாளிகளை தப்ப வைத்து, நீதியைக் கொன்று எரிக்க முயற்சி செய்கிறது. ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறுமி குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவிப்பது என்ற பெயரில், ரீல்ஸ் எடுத்து அதற்குப் பின்னணி சேர்த்து பதிவிட்டு, குதூகலம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *