மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி: சிறுவர்கள் காணாமல் போனால் உடனடி எப்.அய்.ஆர்

புதுடில்லி, மே 24 சிறுவர்கள் கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் பிறப்பித்த உத்தரவில், ”காணாமல் போகும் சிறுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மிகவும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத சிறுவர்களின் எண்ணிக்கை என்பது 47ஆயிரம் வரை உள்ளதாக புள்ளியல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய குற்ற ஆவண கணக்குகள் படி வெளியான தகவல்கள் ஆகும். பல சம்பவங்களில் காவல் நிலையங்கள் வழக்குப்பதிவு செய்வதில்லை. தேடிவருகிறோம் என்று இழுத்தடிக்கப்படுவதாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் புகாராகவே தெரிவிக்கின்றனர். மேலும் சிறுவர்கள் காணாமல் போன புகார் வந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடங்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவாக பிறப்பிக்கப்படுகிறது.

மேலும் காணாமல் போன குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் தொடர்பான முக்கிய வழக்குகளை கையாள தேசிய அளவில் இணைய தளம் உருவாக்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் ஆட்கடத்தல் பிரிவுகள் உரிய முறையில் செயல்படுகிறதா என்பதை காவல்துறை தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *