திருவள்ளுர், மே 23- திருவள்ளுர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலை யத்தை திறக்க கோரி விவசாய சங்கத்தினர் நெல் மூட்டை ஏற்றப்பட்ட டிராக்டருடன் தாமரைப் பக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டத் தில் உள்ள 80 நெல் கொள் முதல் நிலையங்கள் திறக் கப்படாத நிலையில் இருப்பதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலை யங்களை அரசாங்கம் திறந்து வைக்க வேண்டும் என விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்திருந்திருந்தனர்
இந்நிலையில் 20 நாட்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறி விக்கப்பட்டது. ஆனால் 20 நாட்கள் கடந்த பின்பும் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களாக அறுவைடை செய்த நெற்களை காயவைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையில் கோடை மழை அவ்வப்போது பெய்ந்து வருவதால் இந்த மழையால் நெல்கள் முளைக்க தொடங்கினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளுடைய கவலையாகவே இருந்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கும்படி போராட்டம் மேற்கொண்டு வரு கின்றனர்.
திருவள்ளூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
Leave a Comment
