நாகர்கோவில், மே 23- புதுப்பிக்கப்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று (22.5.2026) ஒழுகினசேரியில் நடைபெற்றது. நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டினுக்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகி யோர் தந்தை பெரியாருடைய நூல்களை வழங்கி வாழ்த் துக்கள் தெரிவித்தனர்.
தனது வெற்றிக்காக உழைத்த திராவிடர்கழக பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் பாராட்டினார்.உடன் கழக கோட்டாறு பகுதி தலைவர் ச.ச மணிமேகலை, ச ச.சத்யாராணி சென்றனர்.
