ஆய்வு என்ற பெயரில் விழுப்புரம் அம்மா உணவகத்தில் ஊழியர்களை மிரட்டிய த.வெ.க. நிர்வாகி உத்தரவுகளை பிறப்பித்து அடாவடித்தனம்

விழுப்புரம், மே 22 விழுப்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த தவெக நிர்வாகி, அரசு பணியாளர்களுக்கு உத்தரவுகளை போட்டு அடாவடி செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து மீட்டிங் போடுவது, அரசு அலுவலகங் களில் ஆய்வு என்ற பெயரிலும் தனது உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளை மிரட்டுவது ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதாவது, சட்டமன்ற உறுப்பினர்கள்தான் அடாவடியில் ஈடுபடுகிறார்கள் என்றால் தற்போது ஒருபடி மேலே போய் தவெக நிர்வாகிகளும் தங்களுக்கும் அதிகாரம் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு ஆங்காங்கே ஆய்வு எனும் பெயரில் அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் தவெக மாவட்ட செயலாளரான குஷிமோகன் நேற்று (21.5.2026) தனது நிர்வாகிகளுடன் அங்குள்ள அம்மா உணவகத்திற்கு திடீரென சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள சமையல் அறை, கைகழுவும் இடம், உணவு தயாரிக்கும் பகுதி களை பார்வையிட்ட அவர், அதுசரி யில்லை… இது சரியில்லை.. எனக் கூறி அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கைப்பேசியில் தொடர்புகொண்டு அரசின் உத்தரவுபடி செயல்பட வேண்டும். இல்லாவிடில் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று மிரட்டியிருக்கிறார். இது அரசு ஊழியர்களிடம் மட்டுமின்றி மக்களிடமும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *