அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் கேரளாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம், மே 21 கேரளத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இதை அறிவித்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் வி.டி சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஜூன் 15ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டம் அமலுக்கு வரும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள தனியார் பேருந்த உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியது: அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் மாநிலத்தில் தனியார் பேருந்து தொழில் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே நாங்கள் கடும் இழப்பில் தொழில் நடத்தி வருகிறோம். உதிரி பாகங்கள், பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வரி, பெர்மிட் கட்டணம் போன்றவை மிக அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *