வட சென்னை மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

ஓட்டேரி, மே 20- வட சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந் துரையாடல் கூட்டம் 16/05/2026 அன்று மாலை 8 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி ஒட்டேரி கழகத் தலைவர் வெங்கடேசன் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாவட்ட கழகத் தலைவர் தளபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை அன்பு செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஒட்டேரி கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.பார்த்திபன், மாவட்ட மாணவர் தலைவர் சஞ்சய் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வட சென்னை மாவட்ட எல்லைக்குட் பட்ட பகுதிகளில் கழக சுவர் விளம்பரப் பணிகள் துவங்குவது என்று முடிவு செய்யப்படுகிறது.

கழக சார்பில் மாதம் இருமுறை வெளிவரும் உண்மை சந்தாக்களை கழக இளைஞரணியினர் கழகத்தினர், ஆதரவாளர் கள் மற்றும் பல பொது மக்களிடம் பெற்று கொண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒப்ப டைப்பதாக முடிவு செய் யப்படுகிறது

வட சென்னை மாவட்டத்துக்குட்பட்ட ஏதேனும் ஒர் பகுதியில் இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்துவதெனவும், மாதம் ஒரு முறை உண்மை வாசகர் வட்டம் கூட்டுவதெனவும் இந்த தீர்மானம் முடிவு செய்யப் படுகிறது.

கழக இளைஞரணி யினர் சந்திப்புக்கு ஏதுவாக மாதம் ஒரு முறை கலந்து ரையாடல் கூட்டம் நடத்ததுவதென முடிவு செய்யப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *