10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அரசு பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி

சென்னை, மே 20- தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் மாணவியர்கள் 4,35,247 பேர் மற்றும் மாணவர்கள் 4,35,396 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில் மொத்தம் 8,21,105 (94.31%) பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவியர்கள் 4,19,891 (96.47 %) மற்றும் மாணவர்கள் 4,01,214 (92.15 %). தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பொதுதேர்வினை விட 2026 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.51% கூடுதலாக உள்ளது.

இதில் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,467 ஆகும். மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,490 மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4,977 ஆகும்.

மேலும் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,171 ஆகும். 95% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 8,233.. 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,931 மற்றும் 95% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,436 ஆகும்.

பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்:

அரசு பள்ளிகள் 91.86%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%, இருபாலர் பள்ளிகள் 94.42%, பெண்கள் பள்ளிகள் 96.42% மற்றும் ஆண்கள் பள்ளிகள் 88.50% என தேர்ச்சி சதவீதத்தை காட்டியுள்ளன. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92% கூடுதலாகவும் , இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஆண்கள் பள்ளிகளை விட 5.92% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *