மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! கனிமொழி எம்.பி. கண்டனம்!

சென்னை, மே 20- திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணொருவர் பணி முடித்து வீடு திரும்பு கையில், கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசு, தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, தமிழ்நாடு தொடர்ந்து மகளிருக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் முன்னணி மாநிலங் களில் ஒன்றாக இருந்து வருகிறது.

அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே செயல்படுவது, புதிய அரசின் கடமை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *