சென்னையில் உள்ள ஒன்றிய அரசு கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; 30 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்.
சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி இடங்களில் சேர விரும்புபவர்கள் 10.06.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
டெக்னிசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
மெக்கானிகல் இன்ஜினியரிங் – 3
எலக்டிரிகல் & எலட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 3, எலட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் – 2
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 12,000
கிராஜுவேட் அப்ரெண்டிஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
மெக்கனிகல் இன்ஜினியரிங் – 3
சிவில் இன்ஜினியரிங் – 2
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் – 3
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
டிகிரி – 14
கல்வித் தகுதி: பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி / பையலாஜி / பிசிக்ஸ்)/ பி.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) / பிசிஏ / பி.காம். படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 13,000
வயது தகுதி: இந்தப் பயிற்சி இடங்களில் டிப்ளமோ தகுதிக்கு 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். டிகிரி அல்லது இன்ஜினியரிங் தகுதிக்கு 21 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு தளர்வு: இருப்பினும் ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி (PWBD) பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://nats.education.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையப் பக்கத்தில் NATIONAL INSTITUTE OF OCEAN TECHNOLOGY என்ற இணைப்பில் சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2026
