நெல்லை, மே 19 – மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மும்மொழிக் கொள்கையைக் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.எந்த விதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.என நெல்லையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.
நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் மேற்கு மாவட்ட அலுவலகம் கலைஞர் அரங்கில் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் பங்கேற்றார்.
பின்னர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் தெரிவித்ததாவது:–
மும்மொழிக் கொள்கையை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சரி இப்போதும் சரி,தொடர்ந்து எதிர்த்து கொண்டு தான் இருக்கிறது.
புதிதாக பதவியேற்றுள்ள அரசு தமிழ்நாடு மக்களின் உணர்வை புரிந்து கொண்டு மும்மொழி கொள்கையைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும். எந்த விதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.
