பெரம்பலூருக்கு வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பளிக்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்புரை

பெரம்பலூர், மே. 18– பெரம்பலூர் மாவட்ட கழக சார்பில், மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்டச் செயலாளர் விசயேந்திரன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் ஒரத்தநாடு குணசேக ரன் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது குறித்தும், ‘விடுதலை’ நாளேட்டிற்கு சந்தா சேர்ப்பது குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 29.05.2026 அன்று பெரம்பலூர் வருகையின்போது வரவேற் பளிப்பது குறித்தும் சிறப்பு ரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் எசனை நடராசன் அவர்களது பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு 29.05.2026 அன்று மாலை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரம்பலூரில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.

ஜூன் திங்களில், மாவட்டத்தின் ஒன் றிய, நகரங்களில் கொள்கை விவாத தெருமுனை கூட்டங்கள் நடத்து வது என முக்கிய இரண்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் விசயேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் நடராசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *