குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி,நாகராஜா கோயில் வீதி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழக மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார தாஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கழக பொறுப்பாளர்கள் மா. ஆறுமுகம்,மு.பால்மணி, க.யுவான்ஸ், சி.அய்சக் நியூட்டன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
