சட்டமன்றத் தேர்தலில் வைப்புத்தொகை இழந்த 3,352 வேட்பாளர்கள்

சென்னை, மே 10 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் அதாவது, 83 சதவீதத்திற்கும் அதிகமா னோர் வைப்புத் தொகையை இழந்துள் ளனர் என தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரம் சிறிய கட்சி களும், சுயேச்சை வேட்பாளர்களும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ளும் சவால்களை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

குற்றப் பின்னணி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற் போதுள்ள 233 உறுப்பினர்களில் நால்வரில் ஒருவர் மீது தீவிரமான கிரிமினல் வழக்கு இருப்பதாக வேட்புமனுத் தகவல்களின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிமினல் வழக்குகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் கொண்ட கட்சியாக தவெக முதலிடத்தில் உள்ளது.

தவெகவின் 107 சட்டமன்ற உறுப்பினர் களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; அடுத்த இடங்களில் திமுக (37 பேர்), அதிமுக (33 பேர்) ஆகியன உள்ளன.

அய்ந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் வன்முறை, ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தீவிர வழக்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையிலும் தவெக 19 பேருடன் முதலிடத்தில் உள்ளது. வெற்றிப் பெற்ற 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 193 பேர் பெரும் பணக்காரர்கள்; தவெகவில் மட்டும் 77 பேர் என்பது தகவல்களின்படி தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *