விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசு பரிசீலிக்குமா?

1 Min Read

சென்னை, மே 11- சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் திட்டமிடப் பட்டுள்ள விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, தற்போது ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை 54 கி.மீ. தொலைவிலும், இரண் டாம் கட்டப் பணிகள் 116.1 கி.மீ. தொலைவிலும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முதற்கட்ட திட்டத்தின் நீட்டிப்பாக 15.5 கி.மீ. தொலைவுக்கு விமான நிலையம் முதல் கிளாம் பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை மெட்ரோ பாதையை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மேம்பால வடிவ மைப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்ட அறிக்கையில், “ஒருங் கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டுத் திட்டத்தை” இணைக்கு மாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.

இதனை ஏற்று, அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை இணைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெட்ரோ நிர்வாகம் மீண்டும் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“விமான நிலையம் – கிளாம்பாக்கம் இணைப்பு என்பது நகரின் மிக முக்கியமான போக்கு வரத்துத் தேவையாகும்.  இதற்கான ஒப்புதலைப் பெறத் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர் பார்க்கிறோம்,” என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *