தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு!

2 Min Read

மதுரை, மே 10– தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணி நிரந்தர ஆணைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மதுரை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டு க்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சார வாரியத்தில் குழி தோண்டுதல், மின்கம்பி கள் அமைத்தல், பழுது நீக்குதல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் 1998 முதல் 2014 வரை ஈடுபடுத்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் கோரி தொழிலாளர் ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.

இதை விசாரித்த தொழிலாளர் ஆய்வாளர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்வாரியத்தில் 24மாதங்களில் 480 நாட்கள்தொடர்ந்து பணியாற்றி இருப்பதால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, மின்வாரியம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களைநீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். ‘‘மின்சார வாரியம் சார்பில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடியாக வாரியத்தால் பணிய மர்த்தப்படவில்லை. அவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமே நிய மிக்கப்பட்டனர். பணிநிரந்தரம் கோரும் தொழிலாளர்கள் தொழி லாளர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். தொழிலாளர் ஆய்வா ளருக்கு இதற்கு அதிகாரம் இல்லை.

இவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதால் இவர்களுக்கு பணி நிரந்தரச் சட்டம் பொருந்தாது’’ என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

‘‘பணிநிரந்தரச் சட்டத்தின்படி, ஒரு தொழிலாளர் 480 நாட்கள் பணி யாற்றினாரா என்பதை ஆய்வு செய்து, அவருக்குப் பணி நிரந்தரம் வழங்கத் தொழிலாளர் ஆய்வாளருக்கு முழு அதிகாரம் உண்டு.

தொழிலாளர்கள் மேற்கொண்ட குழி தோண்டுதல், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட பணிகள் கட்டு மானப் பணிகள் அல்ல, அவை மின்வாரியத்தின் நிரந்தரமான மற்றும் அத்தியாவசியப் பணிகள் ஆகும்.

ஏற்கெனவே இதேபோன்ற சூழலில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிநிரந்தரம் வழங்கப்பட்டது. எனவே, இந்தத் தொழிலாளர்களுக்கும் அதே பலனை வழங்குவது அவசியமானது. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணிநிரந்தர ஆணைகள் உறுதி செய்யப்படுகின்றன.’’

இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *