கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.5.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மேற்குவங்க புதிய முதலமைச்சராக பாஜகவின் சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘மாறிய சூழல்’: காங்கிரசுடனான பிரிவுக்குப் பிறகு,  நாடாளுமன்ற அவையில் இருக்கை மாற்றத்தை விரும்பும் திமுக: தேசிய அளவில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் எதிர்காலத்தை வடிவமைக்க கூடிய ஒரு நடவடிக்கையாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திமுக ஒரு கடிதம் எழுதியுள்ளது; அதில், அவையில் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கான இருக்கை அமைப்பில் மாற்றங்களைச் செய்யுமாறு கோரியுள்ளது.

* காங்கிரஸ் மீது அகிலேஷ் மறைமுகமாக விமர்சனம்: இக்கட்டான நேரத்தில் நண்பர்களை கைவிட்டு செல்பவர்கள் அல்ல நாங்கள்: திமுக ஆதரவுடன் 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் விமர்சனம்!!

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜகவின் வேகமான வளர்ச்சியை தடுக்க மாநிலக் கட்சிகளால் மட்டுமே முடியும் – தேஜஸ்வி கருத்து. அண்மையில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சி எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமைக்காக மம்தா விடுத்த அழைப்பை தொடர்ந்து, தேஜஸ்வி இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

தி இந்து:

* ‘பீகார் என்.டி.ஏ. அமைச்சரவையில் 17 வாரிசு அரசியல்வாதிகள், ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்’: பீகார் அரசை கடுமையாக சாடிய தேஜஸ்வி. “வாரிசு அரசியலை எதிர்ப்பதையே முக்கியக் காரணமாகக் கொண்டு, [முன்னாள் முதலமைச்சரும் JD(U) தலைவருமான] நிதீஷ் குமார் [மகாகத்பந்தன்] கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார்.ஆனால் இப்போது, அவரது மகன் [நிஷாந்த் குமார்] தேர்தலில் போட்டியிடாமலோ அல்லது சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலோ அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ளார்,” என தேஜஸ்வி விமர்சனம்.

* 2025-2026 நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGS) அளவு மற்றும் பணி நாட்கள் சரிவு: ஓர் ஆய்வு முடிவு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்: முன்னாள் அமைச்சர் மணிசங்கர் கடும் விமர்சனம்

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *