கேரளத்தில் புதிதாக தேர்வான பெண் உறுப்பினரை கட்டியணைக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் காணொலி இணையத்தில் வெளியானதால் பரபரப்பு

1 Min Read

திருவனந்தபுரம், மே 9 கேரளத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினரை, மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கட்டியணைக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து, அங்கு காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதலமைச்சர்   போட்டியில் ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன், கே.சி.வேணுகோபால் ஆகிய 3 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேரளத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினரை, மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கட்டியணைக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைமையகத்தில் சட்டமன்றக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லம் சட்டமன்ற உறுப்பினர் பிந்து கிருஷ்ணா அங்கு வருகை தந்தார். அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி அவரை வரவேற்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் செரியன் பிலிப் அவரைக் கட்டியணைக்க முயன்றார். இதனை விரும்பாத பிந்து, அவர் கட்டியணைக்க முயன்றதைத் தடுத்து கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த காணொலி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்திற்கு பயனர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். பயனர்கள் பலரும், இந்தச் செயலை முறையற்றது எனக் கூறி, மூத்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *