அட்லாண்டா, மே 8- அமெரிக்க ஊடகத்துறையின் முக்கியமானவரும், சி.என்.என்., செய்தி நிறுவனத்தின் நிறுவனருமான டெட் டர்னர் (வயது 87) உடல் நலக் குறைவால் காலமானார்.
புகழ்பெற்ற சி.என்.என்., என்ற ஊடகப் பேரரசையே நிறுவியவரான டெட் டர்னர், அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்து அட்லாண்டாவில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக டர்னர், ‘லுாயி பாடி டிமென்ஷியா’ என்ற மூளைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். இச்செய்தியை அவரின் டர்னர் என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அவர் மறைந்த சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
இவர், கடந்த 1980ஆம் ஆண்டில், உலகின் முதல் 24 மணி நேர நேரலை செய்தி சேனலான சி.என்.என்., எனும் கம்பிவட செய்தி நிறுவனத்தை தொடங்கினார். மேலும், டர்னர் பிராட்காஸ்டிங் சிஸ்டம் வாயிலாக கார்ட்டூன் நெட்வொர்க், டி.என்.டி., டி.பி.எஸ்., டர்னர் கிளாசிக் மூவிஸ் போன்ற புகழ்பெற்ற சேனல்களை உருவாக்கினார் டெட் டர்னர்.
கடந்த 1997ஆம் ஆண்டு அய்.நா., சபைக்கு 100 கோடி டாலரை நன்கொடை அளிப்பதாக அறிவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார். வாக்குறுதி அளித்தபடியே 10 ஆண்டுகளில் வழங்கினார்.
சி.என்.என். செய்தி நிறுவனத்தின் நிறுவனர் டெட் டர்னர் காலமானார்
Leave a Comment
