ஒரே இடத்தில் 100 பனிப்பாறைகள்: கனடாவின் அய்ஸ்பெர்க் ஆலி-யில் படை எடுக்கும் பனி மலைகள்

நியூஃபவுண்ட்லேண்ட், மே 8- கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்ஸ்பெர்க் ஆலி) பகுதிக்கு இந்த ஆண்டில் முதல் பனிப்பாறைகள் வர தொடங்கியுள்ளன.

10 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த பிரமாண்ட பனிப்பாறைகளுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கினர். பொதுவாக கோடைகாலத்தின் தொடக்கத்தில் தென்படும் பனிப்பாறைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே வரத்தொடங்கியது ஆய்வாளர்களின் இடையே வியப்பை ஏற்படுத்தியது.

2026 ஆண்டின் பருவம் கடந்த ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான பனிப் பாறைகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா நாட்டின் வானிலை மற்றும் சுற்றுசூழல்துறை இந்த மே 5 தேதி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 100க்கும் அதிகமான பிரம்மாண்ட பனிப்பாறைகள் வடக்கு கடற்கரை பகுதியில் மிதந்து கொண்டிருக்கின்றன.

மே மாதம் இறுதி மற்றும் ஜூன் மாதம் தொடக்கமே இந்த பனிப்பாறைகளை மிக அருகில் காண்பதற்கான உகந்த நேரமாக கருதப்படுகிறது. தற்போது நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள செயின்ட் அந்தோனி பகுதியில் அதிகப்படி யான பனிப்பாறைகள் காணப்படு கின்றன. இது ஜூன் 5 முதல் 14 வரை பனிப்பாறை திருவிழா நடைபெறவுள்ளது. அதேபோல் ட்வில்லிங்கேட் மற்றும் போனா விஸ்டா பகுதிகளில் பல பெரிய அளவிலான பனிப்பாறைகள் கடற்கரைக்கு மிக அருகியிலேயே நிலைகொண்டுள்ளன.

செயின்ட் ஜார்ஜ் பகுதியில் நிலப்பரப்பிலிருந்து தெளிவாகப் பார்க்கும் வகையில் பல பனிப் பாறைகள் நகர்ந்து வருகின்றன. பனிப்பாறை பருவத்தை முன்னிட்டு செயின்ட் ஜார்ஜ் பகுதியில் ஆண்டுதோறும் நடத்தபடும் புகழ்பெற்ற அய்ஸ்பெர்க் ஆலி இசைத் திருவிழா தவிர்க்க முடியாத காரணங்களால் 2026 ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் JAG சவுண்ட்ஹவுஸ் போன்ற இடங்களில் தொடரும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகளின் நகர்வுகளை தெரிந்துகொள்ள IcebergFinder.com இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *