திருச்சி மாவட்டம், சோமரசன் பேட்டை திராவிடர் கழக நகர தலைவர், பெரியார் பெருந்தொண்டர் பி.தியாகராசன் (வயது 83) வயது முதிர்வு காரணமாக 6.5.2026 அன்று இயற்கை எய்தினார். தகவலறிந்து கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த பி.தியாகராசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பி.தியாகராசனுக்கு மனைவி தி.ரெங்கநாயகி, பிள்ளைகள் தி.தமிழரசு, தி.குணமணி, தி.கதிவரன் ஆகியோர் உள்ளனர். அவருடைய இறுதி நிகழ்வு 7.5.2026 அன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது.
