டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆட்சி அமைக்க திவெகவை ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் – தலையங்கம்.
* 112 பேருடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? விஜய் கோரிக்கையை நிராகரித்தார் ஆளுநர்: பெரும்பான்மையுடன் வந்தால் தான் பதவிப் பிரமாணம் செய்வேன் என 2ஆவது முறையாக திருப்பி அனுப்பினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மேற்கு வங்கத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அகிலேஷ் குற்றச்சாட்டு; தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவை அவரது காளிகாட் இல்லத்தில் சந்தித்த அகிலேஷ், அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
தி இந்து:
* மகாராட்டிர அரசு ஊழியர்களுக்கான ஹிந்தித் தேர்வு விதி ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மொழிசார் அமைப்புகள் அறிவிப்பு
* தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் குறித்து நாடாளு மன்றத்தில் ‘முறையான விவாதம்’ நடைபெற்றதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘வந்தே மாதரம்’ முஸ்லிம் சட்ட வாரியம் நிராகரிப்பு: தேசிய கீதமான “ஜன கண மன”-விற்கு இணையான தகுதியை “வந்தே மாதரம்” பாடலுக்கு வழங்குவது, அப்பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயமாக்குவது, மற்றும் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசிய கீதத்திற்கு முன்பாக அப்பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்குவது ஆகிய ஒன்றிய அமைச்சரவையின் முடிவை, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) நிராகரித்தது.
– குடந்தை கருணா
