பெரியகோட்டை, மே 8- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பெரிய கோட்டை கிராமத்தில் 01.05.2026 வெள்ளிக்கிழமை மாலை .6. மணி அளவில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மே 1 தொழிலாளர் நாள் விழா தந்தை பெரியார் படிப்பகம் கி வீரமணி நூலகம் நான்காம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கோரா.வீரத்தமிழன் கழக பாடலைப் பாடி வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத்தலைவர் வை.கவுதமன் தலைமை ஏற்று உரை ஆற்றினார்கள், பொதுக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், திராவிடர்கழக மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் தங்க.வீரமணி, நீடாமங்கலம் நகரத் தலைவர் கி.ராஜேந்திரன், கழக இளைஞரணி நீடாமங் கலம் ஒன்றிய தலைவர் கா.சந்திர சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரை ஆற்றினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திராஅன்பழகன் வருகை தந்து நிகழ்ச்சியினை பாராட்டி இந்தப் படிப்பகம் மேலும் மேலும் வளர வேண்டும் இதனை இந்த ஊர் மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வாழ்த்தி கூறி உரையாற்றினார்கள். திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பி .எஸ்.சித்தார்த் தன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்தநாள் விழாவினை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்கள், அதன்படி மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் பெரியகோட்டையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவை பகுத்தறிவாளர் கழகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டு உள்ளனர். தந்தை பெரியார் படிப்பகத்தை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தி கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்கள்.
கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியாரின் கருத்துகள் அனைத்திற்கும் கவித்துவ வரிகளை கொடுத்தவர். தாழ்ந்து கிடக்கும் திராவிடர் சமூகம் நிமிர்ந்து நடக்கக்கல்வியே முக்கியம் என்று பெரியார் நினைத்தார், கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, மகளிர் முன்னேற்றம் என்பதே திராவிடர் கழகத்தின் நோக்கம் இதனையே பாரதிதாசன் தன் கவிதை மூலம் “காலையில் படி கடும்பகல்படி மாலை இரவு பொருள்படும்படி படி, படி” என்று பாடினார். தந்தை பெரியார் படிப்பகங்களைக் கிராமந்தோரும் திறந்தார். இன்றும் திராவிடர் கழகமே எல்லா கிராமங்களிலும படிப் பகங்களை உருவாக்குகின்றது. அதன் மூலமாக எல்லா இடங்களிலும் மாணவர்கள் படித்து தங்களது சமூகச் சிந்தனையைக் கூர்மைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள், இன்று யாரும் படிப்பதே இல்லை, ஒரு நாளைக்கு ஏழு நிமிடமாவது படித்தால் தான் மன அழுத்தம் குறையும் என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. ஆனால் இன்று இளைஞர்கள் செல்போன் செல்போன் என்று ஓடுகிறார்கள், தவறான ஒன்றை சரியானது என்று எண்ணுகிறார்கள், இது மாற வேண்டும் இதை மாற்றத்தான் இது போன்ற படிப்பகங்கள் ஊர்தோறும் உருவாக்கப்பட்டு உள்ளது. ஜாதி மத பேதமற்ற சமூகம் படைப்பதுதான் திராவிடர் கழகத்தின் நோக்கம். அதனை “ஜாதி என்னும் தாழ்ந்த படி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்று ஜாதி ஒழிப்பைக் கவிதைகள் பாடியவர் அதனால்தான் அவர் புரட்சிக்கவிஞர் ஆனார்.
அவரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாளை பகுத்தறிவாளர் கழகம் இன்றைக்கு மிகச் சிறப்பாக மே : 1 தொழிலாளர் தினத்துடன் கொண்டாடி மகிழ் கிறோம். இன்று இருக்கக்கூடிய அரசியல் சூழலை புரிந்து கொள்வதற்கு பாரதிதாசனுடைய கவிதைகள் படித்தால் தெளிவு பெறலாம். அவரின் ஒவ்வொரு கவிதைகளும் தந்தை பெரியாரின் கருத்துகளாய் நம் ஒவ்வொரு உள்ளத்திலும் இறங்கும். தந்தை பெரியார் பெண்கள் கல்வி பெற வேண்டும், ஆணுக்கு நிகராக பெண்களும் படிக்க வேண்டும் என்றார். “தலைவாரி பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னார். உன் அன்னை” என்று பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று தந்தை பெரியாரின் கருத்துகளை பேசியவர் புரட்சி கவிஞர் பாரதிதாசன், இப்படி எண்ணற்ற கவிதைகளில் சமூக சீர்திருத்தத்திற்குத் தேவையான கருத்துகளை அதிகமாக பாடியவர் பாரதிதாசன். அவர் பிறந்த நாளையும் கொண்டாடி,மே 1 தொழிலாளர் தினத்தையும் கொண்டாடி, தந்தை பெரியார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை நான்கு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி அதனுடைய நான்காம் ஆண்டு விழாவையும் மிகச் சிறப்பாக கொண்டாடி கொண் டுள்ள கூடிய மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பெரியகோட்டை பகுதியில் வாழும் பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கும் திராவிடர் கழக தோழர்களுக்கும் இளைஞரணி மாணவர் கழகத் தோழர் களுக்கும் என் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்தப் படிப்பகத்தினை இவ்வூர் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்திக் கூறி உரை யாற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் இப்படிப்பகத்தை எவ்வித ஊதியமும் பெறாமல் ஓராண்டாக கவனித்துக் கொண்டு மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர தனிப்பயிற்சியினையும் நடத்திக் கொண்டு வரக்கூடிய திராவிடர் கழக இளைஞரணி தோழர் க.கார்த்திக்கின் சகோதரி க.கயல்விழிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
கூட்டத்தில் கழக இளைஞர் அணி நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் வடுவூர் து.லோக நாதன், வடுவூர் ஆசையொளி, இளைஞரணி கிருஷ்ணாபுரம் உ .கதிர்வேல், கழக தோழர் கோயில் வெண்ணி தங்க.சரவணன், பெரியகோட்டை க.ஜீவானந்தம், ரா.ரஞ்சித்குமார். மா.தமிழ்ழகன், மா.தமிழரசன், வி.சுதன், வீரா.தமிழ்த்தென்றல், இ. இளமுகில், இ. இளமுதன், ரா.முகிலன், மு .ஹரிபிரகாஷ், மு.ஹரிஸ், பா.பகலவன், நெ.பூமிநாதன், சே.ராம்பிரகாஷ், கோயில்வெண்ணி தோழர்கள் வீ.திலீபன், ந.கோபிநாத், கா.அஜய், வாசுதேமங்கலம் இ.தீபக், ச.கவுதமன், முன்னா வல்கோட்டை ச.பாலாஜி, கோயில் வெண்ணி மாணவர்கள் ஜெகதீஸ்வரன், ஜெயகிருஷ்ணா, மனோபாலா, கோயில் வெண்ணி தமிழ்ப்படிப்பக ஒருங்கிணைப்பாளர் சி.சுதாகர், பெரியகோட்டை கழக இளைஞரணி தோழர் சே.சுருளி ராஜன், சே.தமிழர சன் இள.விக்னேஷ், மா. மணிமுத்து, மற்றும் கிராமத்தலைவர்கள், பெரியார் பிஞ்சுகள் இர.மகிழினி, இர.நிகழினிதா த.தமிழ்வெண்பா மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.ரமேஷ் ஒருங்கிணைத்தார்கள் இறுதியில் கழக இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் க.இராஜேஷ்கண்ணன். நன்றி கூறினார். காலை முதல் மாலை வரை பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன இறுதியில் சிறுவர்களுக்கான கபாடி போட்டியும்நடைபெற்றது, நிகழ்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கி பாராட்டப் பட்டது.
