சென்னை, மே 7 மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைத் தொரட்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடை பெற்றன.
மேற்கு வங்கம் – முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்திலும் சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட அராஜக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
வன்முறை
“மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை யொட்டி, அம்மாநிலத்தில் வன் முறை சம்பவங்களில் பாஜக குண் டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, எதிர்கட்சிகளின் அலுவ லகங்கள், கொடிக் கம்பங்கள், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத் தில் அமைந்துள்ள உலகத் தொழி லாளர்களின் ஒப்பற்ற தலைவர் மாமேதை தோழர் லெனின் சிலையை உடைத்துள்ளனர். அதேபோன்று, திரிபுரா மாநிலத் திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாஜக குண்டர்களின் இந்த அராஜக வன்முறை தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பாசிச சக்திகள் லெனின் சிலையை சேதப்படுத்தினாலும் அவரது சித்தாந்ததை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தோழர் லெனின் சிலையை உடைத்து, எதிர்க்கட்சி அலுவல கங்ளையும், தோழர்களையும் தாக்கி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாஜக குண்டர் களை அம்மாநில காவல்துறை உடனடியாக கைது செய்து அமைதியை ஏற்படுத்திட வேண்டு மெனவும், பாஜகவினரின் இந்த அராஜக வன்முறை வெறி யாட்டங்களை கண்டித்து ஜனநாயக சக்திகள் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்பிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
