ஆட்சி அமைக்க தவெக-வுக்கு ஆதரவு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி விலகல் ‘பதவியைவிட சுயமரியாதையே முக்கியம்’

சென்னை, மே 7  ஆட்சி அமைக்க தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பதவி விலகி கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் ‘பதவியைவிட எங்களுக்கு சுயமரியாதையே முக்கியம்’ என குறிபிட்டுள்ளனர்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியில் பதவி விலக  வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும்.சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின்  ஆதரவு தேவை எனும் நிலையில், தவெகவுக்கு கூடுதலாக 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தமிழ்நாட்டில் ஆட்சி யமைக்க தவெகவுக்கு தற்போது காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 பேர் தேவைப்படு கின்றனர். இந்தச் சூழலில் விசிக, கம்யூ னிஸ்ட் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு, கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கட்சித் தலைமையின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சிப் பதவிகளிலிருந்து விலகி வருகின்றனர்.

பதவி விலகல்

தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் ஏஅய்பிசி நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தவெக கூட்டணியில் இணைந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விலகல் அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், “பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி வெளியிட்டுள்ள பதிவில், “கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை, பா.ஜ.க வும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *