அமெரிக்காவில் முதல் புத்தாக்க மய்யம் சென்னை அய்அய்டி அறிவிப்பு

சென்னை, மே 7- அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் முதல் புத்தாக்க மய்யத்தை அமைத்ததாக சென்னை அய்அய்டி-யின் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவித்தது.

கடந்த ஏப்.24-ஆம் தேதி கலிஃபோா்னியாவில் உள்ள மென்லோ பாா்க்கில் இந்த மய்யம் அமைக்கப்பட்ட நிலையில், இது தொடா்பான அறிவிப்பை மேரிலாண்டில் உள்ள தேசிய துறைமுகத்தில் 5.5.2026 அன்று நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் சென்னை அய்அய்டி உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டது.

அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி திருமலை மாதவ்நாராயண் கூறுகையில், ‘புத்தாக்க நிறுவனங்களின் ஆதரவோடு அமெரிக்காவில் எங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க மென்லோ பாா்க் மய்யம் அமைக்கப் பட்டுள்ளது. மொத்தம் ரூ.70 கோடி முதலீட்டில் (7.5 மில்லியன்) மேம்படுத்தப் படும் இந்த மய்யத்தில் பசுமை முதலீடுகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப் படுகிறது.

இதன்மூலம் பன்னாட்டு புத்தாக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என எதிா் பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத் தாக்குக்கு அருகே அமைந்துள்ள மென்லோ பாா்க் புத்தாக்க மய்யம் பன்னாட்டு சந்தை அணுகல் மற்றும் வணிகமயத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங் களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் இந்த மய்யம் முக்கியப் பங்காற்ற வுள்ளது.

இதை மேலும் வலுப் படுத்தும் வகையில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை அருகே மற்றொரு புத்தாக்க மய்யத்தை அமைக்கும் திட்ட முள்ளதாகவும் சென்னை அய்அய்டி உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *