வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பவுர்ணமியன்று மலை ஏறிய இளைஞர் உயிரிழப்பு! இந்த ஆண்டு இதுவரை 12 பேர் உயிரிழப்பு

கோயம்புத்தூர், மே 4  கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில், சித்திரை முழுநிலவு நாள் அன்று மலை ஏறிய 34 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எதிர்பாராத வித மாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மலை ஏறிய இளைஞர் உயிரிழப்பு

அவரது உடமைகள் எதுவும் அருகில் இல்லாத நிலையில் உயிரி ழந்தவர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை . முதற்கட்டத் தகவலின்படி,  மூச்சுத்திணறலால் ரத்த ஓட்டம் சீரற்ற நிலைக்குச் சென்றது மரணத்திற்குத் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உயிரிழந்த நபரின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படாததால், ஆலந்துறை காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறி செல்பவர்கள்ள தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 12 பேர் மலையேற்றத்தின் போது உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்.

போதிய உடல் தகுதி இன்மை, மூச்சுத்திணறல் மற்றும் செங்குத் தான பாதைகளில் ஏறும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு ஆகிய வையே மரணத்திற்கு முக்கியக் காரணங்களாக மருத்துவர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது.

இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சமீபத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையும் சுகாதாரத் துறையும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும் பலர் எச் சரிக்கையைப் புறந்தள்ளி மலையேறி பாதியிலேயே மரணிக்கும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *