சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் அசத்தல்: தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்! ஒன்றிய மின்சார ஆணையம் தகவல்!

சென்னை, மே 3 – சூரியசக்தி மின் உற்பத்தியில் தென்னிந்திய மாநி லங்களிலேயே தமிழ்நாடு முத லிடம் வகிப்பதாக ஒன்றிய மின்சார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், புவி வெப்பமடை வதை குறைக்கவும் உலக நாடுகள் அனைத்தும் ‘‘பசுமை ஆற்றல்’’ நோக்கி வேகமாக பயணித்து வரு கின்றன. அந்த வகையில், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை சார்ந்திருக்காமல், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தென்பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உரு வெடுத்துள்ளது.

அதன்படி, ஒன்றிய மின்சார ஆணையம் அண்மையில் வெளி யிட்ட தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் தென்னிந்திய மாநிலங்களில் மொத்தம் 613 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகி உள்ளதாம். இதில் தமிழ்நாடு மட்டும் தனிச்சிறப்பாக 218.60 கோடி யூனிட்களை உற்பத்தி செய்து முதலிடத்தை அலங்கரிக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டின் உற்பத்தி 160 கோடி யூனிட்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு காலத்திற்குள் சுமார் 58 கோடி யூனிட்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி வேகமாக நடைபோடுகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கரு நாடகா 181 கோடி யூனிட்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திரா 113 கோடி யூனிட்களையும், தெலங்கானா 71 கோடி யூனிட்களையும் உற்பத்தி செய்துள்ளன.

சூரிய சக்தி
மின் நிலையங்கள்!

கேரளா 29 கோடி யூனிட்களுடன் அடுத்த இடத்தில் இருக்க, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 10 லட்சம் யூனிட்களை பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பீட்டு லிஸ்ட்டில், தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரிய அளவில் இருப்பது நன்றாகவே தெரியவருகிறது. தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான வானிலைதான் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி தடையின்றி கிடைப்பதால், சூரியசக்தி மின் நிலையங்களுக்கு தமிழ்நாடு ஒரு ‘சொர்க்கபுரியாக’ மாறியுள்ளது. சூரியசக்தி மின் நிலையங்கள் இதன் விளைவாக, பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளில் நிலப்பரப்புகளில் அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலை யங்களை அமைக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

சாமானிய மக்களும்…

அரசு மற்றும் தனியார் நிறு வனங்கள் மட்டுமல்லாமல், சாமா னிய மக்களும் இப்போது சூரிய சக்தியின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கி விட்டார்கள். கரண்ட் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவது தற்போது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது என்று சொல்லலாம். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டின் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 13,579 மெகாவாட் என்ற நிலையை எட்டியுள்ளது.

வியக்க வைக்கும்
வளர்ச்சி!

மழைக்காலங்களைத் தவிர்த்து மிச்ச நாட்களில் தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி யூனிட் வரை மின்சாரம் தங்குதடையின்றி உற்பத்தியாகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடு கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2024-2025 நிதியாண்டில் 1,573 கோடி யூனிட்களாக இருந்த சூரியசக்தி மின் உற்பத்தி, 2025 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1,969 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு பசுமை ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்வதை உறுதிப்படுத்துகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *