சின்னவடவாடி கா.அறிவழகன் மறைவு: தமிழர் தலைவர் இரங்கல் – பொதுச் செயலாளர்கள் முனைவர் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன் இறுதி மரியாதை

2 Min Read

திராவிடர் கழகம்

விருத்தாசலம், மே 3- திரா விடர் கழக விருத்தாசலம் ஒன் றிய இளைஞரணித் தலைவர் கா.அறிவழகனுக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 27.4.2026 அன்று உயிரிழந்தார்.

விருத்தாசலம் கழக மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கா.அறிவழகன் திராவிடர் கழக விருத்தாசலம் ஒன்றிய இளைஞரணி தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி  சொந்த பணியின் காரணமாக இருசக்கர வாகனத்தில் கடலூர் சென்றுகொண்டிருந்த போது, சாலை விபத்தில் மூளையில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 27 ஆம் தேதி அறிவழகன் உயிரிழந்தார். உயிரிழந்த அறிவழகன் அண்ணன் குமரேசன் மற்றும் விருத்தாசலம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆறுதல் கூறினார்.  பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் மருத்துவமனைக்கு நேரில் வந்து அறிவழகன் உடலுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், அரும்பாக்கம் சா.தாமோதரன், விருத்தாசலம்  மாவட்ட தலைவர் த.சீ.இளந்திரையன், செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

ஏப்ரல் 28 ஆம் தேதி அறி வழகன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மாவட்ட காப்பாளர் அ.இளங் கோவன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அறிவழகன் உடலுக்கு மாலை அணிவித்து இரங்கல் உரையாற்றினார். இதில் ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அறிவழகனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,  துணைப்பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம், புதுவை மாவட்ட செயலாளர் தி.இராசா, ஆகியோர் கைப்பேசி மூலம் அறிவழகன் குடும்பத்தார் மற்றும் கழகப் பொறுப் பாளர்களிடம் ஆறுதல் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *