உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்

2 Min Read

உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்

குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்குரைஞர்கள் முடிவு

சென்னை, ஏப்.28 சென்னை மற்றும் மதுரை உயர்நீதி​மன்​றங்களில்  நீண்ட கால​மாக காலி​யாக உள்ள 23 நீதிபதி பணி​யிடங்​களை சமூக நீதி அடிப்​படை​யில் விரை​வில் நிரப்ப வேண்​டும் என வழக்​குரைஞர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து சென்னை உயர் நீதி​மன்ற வழக்குரைஞரும், தமிழ்​நாடு – புதுச்​சேரி பார் கவுன்​சில் உறுப்​பினரு​மான எம்​.வேல்​முரு​கன் உள்​ளிட்ட வழக்​குரைஞர்கள் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

நாடு முழு​வதும் 300-க்​கும் மேற்​பட்ட நீதிபதி பணி​யிடங்​கள் நீண்ட கால​மாக நிரப்​பப்​ப​டா​மல் காலி​யாக உள்​ளன

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணி​யிடங்​கள் 75. ஆனால், 52 பேர் மட்​டுமே பணி​யில் உள்​ளனர்.

எஞ்​சிய 23 பணி​யிடங்​கள், அதாவது மூன்​றில் ஒருபங்கு இடங்கள் நீண்ட கால​மாக காலி​யாக உள்​ளன. மேலும், தற்​போது மூத்த நீதிப​தி​யாக உள்ள ஆர்​.சுரேஷ்கு​மார் மே மாதத்​துடன் ஓய்வு பெற உள்​ளார்.

இந்தச் சூழலில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் புதிய நீதிப​தி​களை நியமிக்க ஏற்​கெனவே 24 பேர் கொண்ட பட்​டியல் உச்ச நீதி​மன்​றத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டும், இது​வரை பரிசீலிக்​கப்​பட​வில்​லை. இதனால், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களின் தேக்​கம் அதி​கரித்து நீதிப​தி​களுக்கு பணிச் சுமை அதி​கரித்​துள்​ளது.

வழக்குகளை மீண்​டும் பட்​டியலுக்குக் கொண்​டுவர முடி​யாமல் வழக்குரைஞர்கள் சிரமத்​துக்கு ஆளாகின்​றனர். இதனால் வழக்​காடிகள் வேதனையடைந்​து, நீதித் துறை மீதான நம்​பிக்​கையை இழக்​கின்​றனர்.

பணி​யில் உள்ள நீதிப​தி​கள் எப்​போது ஓய்வு பெறு​வார்​கள் என்​பது முன்​கூட்​டியே தெரி​யும் நிலை​யில், அதை கணக்​கிட்டு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காலி​யாக உள்ள 23 நீதிப​தி​கள் பணி​யிடங்​களை​யும் சமூக நீதி​யின் அடிப்​படை​யில் விரை​வாக நிரப்ப உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யும், ஒன்றிய சட்ட அமைச்​சக​மும், குடியரசுத் தலை​வரும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இதுதொடர்பாக அனைத்து வழக்குரைஞர்களும் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள்கூறினர்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *