சென்னை, ஏப்.27 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளி நாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை (FCRA Amendment) திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் ஜூன் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையில் பிரம்மாண்ட இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆச்சரியமூட்டும் வகையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு மதத் தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிறுபான் மையின சமூகப் பிரதிநிதிகள் உள் ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
கருத்தரங்கில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், இந்த சட்டத்திருத்தத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகளைப் பட்டியலிட்டார்:
“இந்த மசோதா ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் அபாயம் கொண்டது. இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (NGOs) சுயாட்சி மற்றும் செயல்பாடுகளைக் கடுமை யாக முடக்கும்.” தன்னார்வ அமைப்புகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்:
ஏழை, எளிய மற்றும் தாழ்த் தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும். பழங்குடியின மக்க ளுக்கான சமூக நலத் திட்டங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.
அடித்தட்டு மக்களுக்கான அத்தி யாவசிய உதவிகள் சென்றடைவதில் சிக்கல் ஏற்படும்.
இந்த கருத்தரங்கின் முடிவில், மக்கள் நலனைப் பாதிக்கும் இந்தச் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி, ஜூன் 28-ஆம் தேதி இந்தியா முழுவதும் உண் ணாவிரதப் போராட்டம் நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

