கவனம்! கவனம்!! ‘பாராசிட்டமால்’ மாத்திரை கொடுக்கக் கூடாது : சுகாதாரத்துறை எச்சரிக்கை!

1 Min Read

சென்னை, ஏப்.23 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பல மாவட் டங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக கோடை கால நோய்கள், வைரஸ் தொற்றுகள் பரவும் சூழல் எழுந்துள்ளது. மற்றொரு புறம், இணை மருத்துவப் பயனாளிகள் குழந்தைகள், முதியவர்கள் பகல் வேளைகளில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று வெப்பவாத பாதிப்புகளை (ஹீட் ஸ்ட்ரோக்) எதிர் கொள்ளும் வகையில் மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகளை ஆயத்த நிலையில் வைத்திருக் குமாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், வெப்பவாத பாதிப்புக்கு உள்ளாவோரின் உடல் வெப்ப நிலையைக் குறைக்க மருத்துவரின் பரிந்துரையின்றி சிலர் வெவ்வேறு மாத்திரைகளை உட்கொள்வதாகத் தெரிகிறது. இதனால், கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகா தாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- வெப்ப வாதம் பாதிக்கப்பட்டு எவருக் கேனும் மயக்கம் ஏற்பட்டாலோ, உடல் சோர்வாக காணப்பட்டாலோ நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களில் ஒருபக்கமாக படுக்க வைப்பது அவசியம். அவர்களை தண்ணீர், இளநீர், மோர் பருகச் செய்து உடல் வெப்ப நிலையை குறைக்கலாம்.
மேலும், நீரில் நனைத்த துணியை உடலில் வைத்து துடைத்து வெப்பத்தைத் தணிக்க வேண்டும். காய்ச்சல் என நினைத்து, ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை கொடுத்தால், காய்ச்சல் குறைந்தாலும், எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே மருத்துவரின் பரிந்துரையின்படி மட்டுமே கோடை காலத்தில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *