‘இந்து தமிழ்திசை’ நாள்தோறும் மேற்கண்ட தலைப்பில், ‘கேளிக்கை’ என்ற பெயரில் எதையோ கிறுக்குகிறது.
அளவுக்கு அதிகமாகிறது அதன் போக்கு!
இன்று இதோ!
செய்தி: 75 சதவிகித பெண்கள் வாக்குகள் தி.மு.க.வுக்குக் கிடைக்கும்.
– அமைச்சர் ரகுபதி
பஞ்ச்: 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கெடுத்த பிறகா?
பதிலடி: ஏதோ ஒரு வகையில் நஞ்சைக் கக்குவதா?
33 சதவிகித பெண்கள் இட ஒதுக்கீட்டை கெடுத்தது யார்?
2023 ஆம் ஆண்டே பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 2024 தேர்தலில் செயல்படுத்தியிருக்க வேண்டியதுதானே!
தொகுதி மறுவரையறை மசோதாவுடன் அதனை ஏன் இணைக்கவேண்டும்?
இதெல்லாம் தெரியாதா ‘இந்து தமிழ் திசை’க்கு?
தெரியும்தான் – என்றாலும், ‘இந்து’வாயிற்றே!

