செய்தி: தொகுதி மறு வரையறை விசயத்தில் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு வராது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். அதனால் தமிழ்நாடு கவலைப்பட தேவையில்லை, எடப்பாடி பழனிசாமி பேச்சு.
சிந்தனை: அண்ணா தி.மு.க. என்பது அமித்ஷா தி.மு.க.வாகிவிட்டது என்று பரவலாகப் பேசப்படுவது வேடிக்கை அல்ல; உண்மைதான் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி நிரூபித்து வருகிறார்.
***
செய்தி: தொகுதி மறுவரையறையை கண்டித்து திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து இருப்பது பற்றி நாடாளுமன்றத்தில் கேலி பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.
சிந்தனை: கருப்பு என்றால் ஏளனமா? அப்படி என்றால் கண்ணின் கருவிழியை பிடுங்கி எறிந்து விடலாமே செய்வார்களா?

