மகளிர் இடஒதுக்கீடு போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதா ஜனநாயகத்தின் மீதான வஞ்சக தாக்குதல் முழு பலத்துடன் எதிர்ப்போம் – கார்கே

2 Min Read

புதுடில்லி, ஏப்.17 மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நிற்கும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் குறைபாடுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மூலம் நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது. நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். நமது ஜனநாயகத்தின் மீதான இந்த வஞ்சகத் தாக்குதலை எங்களின் முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று (16.4.2026) காலை 11 மணிக்குக் கூடியது. அப்போது தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்  கே.சி. வேணுகோபால், “இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ஒன்றிய அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மீதான தாக்குதல். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஒன்றிய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பிறகே தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. அவ்வாறு இருக்க, இப்போது எதற்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயல்கிறது” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதை எதிர்ப்பதாக இருந்தால் பிரிவு 72-இன் கீழ் தொழில்நுட்ப காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்க முடியும். தொழில்நுட்ப பிரச்சினை ஏதும் இல்லாத நிலையில் மசோதா தாக்கல் செய்வதை எதிர்க்க முடியாது” என கூறினார்.

தொடர்ந்து மசோதாவை அறிமுகம் செய்ய அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா அறிமுகத்துக்கு ஆதரவாக 207 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், மசோதாவை அறிமுகம் செய்வதற்கு அதிக ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *