குடியேற்றம், ஏப். 14- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.04.2026 அன்று மாலை 6 மணிக்கு குடியேற்றம் பெரியார் அரங்கில், ப.க. மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
குடியேற்றம் நகர ப.க. தலைவர் ப.ஜீவானந்தம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார் வழிகாட்டுதல் உரையாற்றினார். வேலூர் மாவட்ட ப.க. செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி நோக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட கழக செயலாளர் தமிழ்தரணி, வேலூர் மாவட்ட ப.க. துணைச் செயலாளர் க.பரமசிவம், நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார், நகர கழக அமைப்பாளர் வி.மோகன் மற்றும் ப.க. தோழர்கள் சாபீர்,இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136ஆவது பிறந்த நாள் மற்றும் மே-1 தொழிலாளர் தினம் முன்னிட்டு அய்ந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவிய பயிற்சி முகாம் 01-05-2026 முதல் 30-05-2026 வரை ஒரு மாதம் நடத்துவது என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு பகுத்தறிவு மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது
வேலூர் மாவட்ட ப.க. நிர்வாகிகள் பரிந்துரை பேரில், ப.க. மாநில அமைப்பாளர் இர.அன்பரசனின் வழிகாட்டுதல் பேரிலும், ப.க. மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வனின் ஒப்புதலின்படி வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவராக கே.எஸ்.அஷ்ரப் நியமனம் செய்யப் பட்டார்.
கலந்துரையாடல் கூட்டத் தின் முடிவில் வேலூர் மாவட்ட ப.க. துணைத் தலை வர் பி.தனபால் நன்றியுரை ஆற்றினார்.

