பக்தர்களுக்குப் புத்தி வராதா? உ.பி. மதுராவில் சோகம் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் பலி

1 Min Read

மதுரா, ஏப். 13- பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் முக்த்சாரைச் சேர்ந்த சுமார் 150 பக்தர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவினர் 11.4.2026 அன்று உபி மாநிலம் மதுராவுக்கு வந்தனர். அவர்கள் மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் படகு சவாரி செய்தனர். நேற்று மதியம் பிருந்தாவனில் உள்ள யமுனை நதியில் படகு சென்று கொண்டு இருந்த போது திடீரென கவிழ்ந்தது.
இதில் குறைந்தது 10 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போய் உள்ளனர். இதுவரை 16 முதல் 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன வர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *