திருவண்ணாமலை. ஏப்.10- திருவண்ணாமல யில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் விழுப்புரம் மாவட் டம் மேனாள் பொதுக் குழு உறுப்பினர் நல்லா பாளையம் புலவர் அ. எத்திராசன் (வயது 93 ) அவர்களை அவரது மகள் இல்லத்தில் வேட்டவலம் பி.பட்டாபிராமன், விழுப்புரம் மாவட்ட கழக காப்பாளர் கொ.பூங்கான், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நல்லாபாளையம் ஏ.ரமேஷ். கண்டாச்சிபுரம் நகரக் கழகத் தலைவர் இரா நாகராசன், மற்றும் கழகத் தோழர்கள் கணேசன், கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அவரும் வாழ்விணை யரும் மிகுந்த உணர்ச்சி யும் மகிழ்ச்சியும் அடைந் தனர்.
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக வளர்ச்சிக்கு மறைந்த கெடார் நடராச னுடன் இணைந்து இயக்கத் திற்காக பெரும் பங்காற்றி யவர் புலவர் அ.எத்தி ராசன் அவர்கள் ஆவார்.

