பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒகேனக்கல்லில் சிறப்பாக நடத்தப்படும் தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தருமபுரி, ஏப். 10– தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.4.2026 செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்.வடிவேலன் மாவட்ட துணை செயலாளர் (அரூர்) வரவேற் புரையாற்றினார்.

அ.தமிழ்செல்வன் மாவட்ட கழகத் தலைவர் (அரூர்) ந.அண்ணா துரை (ப.க மாநில அமைப்பாளர்), மா.சென்றாயன் (ஒன்றிய  தலைவர்) முன்னிலை வகித்தனர்.

மாநில கலைத்துறை செய லாளர் மாரி.கருணாநிதி தொடக்க வுரையாற்றினார்.

கதிர்.செந்தில்குமார் (ப.க மாவட்ட தலைவர்), இர.கிருஷ்ண மூர்த்தி (ப.க மாவட்ட செயலாளர்) நோக்கவுரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உ.ஜெயராமன் வழிகாட்டுதல் உரையாற்றினார்.

பங்கேற்றோர்

இளைய.மாதன் மாவட்ட துணைத் தலைவர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி து.செயலாளர், கு.சரவணன் பொதுக்குழு உறுப்பினர், பெ.மாணிக்கம் தொழிலாளரணி செயலாளர், கீரை.பிரபாகரன் கலைத்துறை அமைப்பாளர் அரூர், தி.அன்பரசு ப.க அமைப்பாளர், கண்.ராமச் சந்திரன் நகர் இளைஞரணி தலைவர், மா. சுந்தரம் பாப் பாரப்பட்டி நகர தலைவர்,  ஆர். பழனி நகர செயலாளர் ஊமை.காந்தி மாவட்ட விவசாய அணி தலைவர், கே.பச்சியப்பன் சிந்தல்பாடி, எல். மாதேஷ் விவசாய அணி செயலாளர், கி. வீரமணி மாவட்ட மாணவர் கழகத் தலைவர், மு.வினித்ராஜ், எ.ஷான்பாஷா, மாவட்ட செயலா ளர் மா.முனியப்பன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரைப் பயணமாக 13.04.2026 பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதி பொம்மிடி யிலும், பாலக்கோடு தொகுதி பாலக்கோட்டிலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகம் சார்பாக அதிக தோழர்கள் கலந்துக் கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.

எதிர்வரும்(25.04.26&26.04.26) இரண்டு நாட்கள் தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கு அனுமதி அளித்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்துவதற்கு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.

நிதிக் குழு

வரவேற்புக் குழு மற்றும் பதிவுக்குழு

விளம்பரக்குழு

நிர்வாகக் குழு

உணவுக்குழு

சிறப்பு அழைப்பாளர்களை சீரமைக்கும் அணி

பயிற்சியாளர்களை சீர்படுத்தும் அணி

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *