தாய்க் கழகம் பாராட்டுகிறது!

2 Min Read

நமது போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள், பண்பாளர்; அமைதி யானவர்; யாரையும் எடுத்தெறிந்து பேசத் தெரியாதவர்; எங்களது பாசம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. எந்த நிலையிலும் எங்களை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள். அவரை உடன்பிறவாத சகோதரர் என்று தான் நாங்கள் பார்ப்போம். அவர் மாற்று அணியிலே இருந்தாலும் கூட, அவரொரு கொள்கைத் தங்கம். அவர் இன்றைய சூழ்நிலையை புரிந்து கொண்டிருக்கிறார். மனம் வெறுத்து, எது கொள்கைக் கூட்டணியோ, அங்கு தான் எனக்கு வேலை என்று மதிப்பிற்குரிய ஒ.பி.எஸ். அவர்கள், இந்த அணிக்கு வந்தார்கள். பெருத்த மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால், யார் எங்கே இருக்க வேண்டுமோ அவர் அங்கே இருக்கிறார்.

அவருடைய பொது வாழ்வையே முடித்து விட்டோம் என்று சிலர் கனவு கண்டார்கள். இல்லை, இதுதான் அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்கின்ற அளவுக்கு சரியான முடிவு எடுத்து அவர்கள் வந்திருக்கிறார்கள். பண்பாட்டின் சிகரமாக இருக்கின்ற நம்முடைய ஒ.பி.எஸ். அவர்கள், ஏன் அந்த இடத்தை விட்டு வந்தார்கள்? அவர் காட்டிய சகிப்புத்தன்மை, பொறுமை இதுவரை உலகில் எந்த அரசியல்வாதியும் காட்டியதில்லை. அம்மையார் ஆட்சியிலே அவரைப் போன்ற ஒரு விசுவாசி வேறு யாரும் கிடையாது. என்னிடத்திலேயே அந்த அம்மையார் நேரடியாக,
‘ஒ.பி.எஸ். அவர்களை நம்பலாம்’ என்று பேசி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலிலே எது கொள்கை என்பதைப் பார்த்து அந்தக் கொள்கையை காப்பாற்றுவதற்காக இன்றைக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்கு கேட்டு வந்திருக்கிறார்கள். வெற்றி வீரர் நமது பன்னீர்செல்வம் அவர்கள் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியோடு வெற்றி பெறப் போகிறார். அவருக்கு, எங்களுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இது, தாய்க் கழகத்தின் வாழ்த்து!

போடிநாயக்கனூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், திராவிடர் கழக வெளியீடான ‘திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும், ஏன்?’’ என்ற புத்தகத்தை வழங்கினார் (8.4.2026).

– போடிநாயக்கனூர் தொகுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (8.4.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *