சிங்கப்பூர் கவிமாலை நிறுவனரும், பகுத்தறிவாளரு மான மா.அன்பழகன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து, அவரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மேலும் மா.அன்பழகன் அவர்கள் விரைவில் நலமடைந்து வீட்டிற்குத் திரும்ப தமது விழைவைத் தெரிவித்தார்.

