திருத்துறைப்பூண்டி, ஏப். 6- “அறிவுலக ஆசான்” தந்தை பெரியார் 144ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியார் 1000 வினா – விடை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா திருத்துறைப் பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
10.1.2023 அன்று மதியம் 2 மணிக்கு தூய அந்தோனி யார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவாரூர் மண்டல செயலாளர், பெரியார் ஆயிரம் ஒருங்கிணைப் பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி தலை மையில், திருத்துறைப்பூண்டி ஒன் றிய தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் இரா.அறி வழகன், நகர செயலாளர் ப.நாக ராஜன் ஆகியேர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், மெடல், பெரியார் படம் பொறிக்கப்பட்டு மாண வரின் பெயர், கலந்து கொண்ட பள்ளியின் பெயர் இடம் பெறும் வகை யில் தயார் செய்யப்பட்ட “பெரியார் 1000 விருது”களை வழங் கினார்.
33 நினைவுப் பரிசு பெற்றவர்கள் (33 பேர்) விவரம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கே.ஆதிஷ், க.முத் தரசன், ர.கிஷோர், வே.மா.முகிலன். நெடும்பலம் அரசு உயர்நிலைப் பள்ளி யோகராஜன், ஜி.யோகேஸ் வரன், எஸ்.சானியா மிர்ஷா, எஸ்.செல்வகுமார். கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆர்.பிருந்தா, ஜே.ஜெனிபர், ஜி.ரகு. திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பா.பிரிய தர்ஷினி, ஷே.ஆசிகா, ச.சரண்யா. சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
சு.ரத்திஷ், அ.வருண், பு.விஷ்வா. தூய அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சீ.க.லிதன், பா.சவர்க்கர், மு.கவி பாலாஜி, ஆ.ஆருள்ரீனா, சி.அபிராமி, வீ.விஷ்வா, புனித தெரசாள் பெண்களின் மேல் நிலைப் பள்ளி எஸ்.தரணிகா, எஸ்.ஆக்னஸ் மாதரிசி, டி.ரித்திகா, பி.தர்ஷினி, எஸ்.சிறீவானி, எஸ்.ஜெயசிறீ, எஸ்.தர்ஷிகா, கே.தேஜாசிறீ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஒன்றிய அமைப் பாளர் ந.செல்வம், மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், ஆசிரியர் கு.நேரு, விநோத், ஓவிய ஆசிரியர் சேகர், கணினி ஆசிரியர் கவாஸ்கர் பெரியார் 1000 வினா- விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் நினைவுப் பரிசு வழங்கினார்கள் திருத்துறைப்பூண்டி திராவிடர் கழக பொறுப்பாளர்கள்.
திருத்துறைப்பூண்டி கழகம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது.