கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியம் ஆனந்தக்குடி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் 31.3.2026இல் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை பார்வையிடப்பட்டது. எழில்கட்டடக்கலை, ரோபோட்டிக் பிரிவு, நூலகம் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். பேராசிரியர் பெருமக்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு விளக்கினர். குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கி சிறப்பித்தனர். அனைத்தையும் முழுமையாக காண முடியாமல் பிரியா விடைபெற்றனர். முழுநாளில் வளாகம் முழுவதையும் காணவேண்டும் என ஆசையைத் தெரிவித்தனர்.

