வாசிங்டன் மேயர் பதவிக்குப் போட்டியிடும் தமிழ்ப் பெண்

1 Min Read

வாசிங்டன், ஏப். 5- அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன் மேயர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. அதற்கு முன் வரும் ஜூன் மாதத்தில் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்தவரான ரினி சம்பத் போட்டியிட இருக்கிறார். ரினி 7 வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டனர். அதன்பின் அங்கேயே வளர்ந்த அவர், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் பின்னர், அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் முன்னணி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக ரினி சம்பத் பணியாற்றினார்.
தமிழ்நாட்டில் பிறந்தவரான ரினி சம்பத் (31 வயது), அமெரிக்காவின் வாசிங்டனின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் மேயர் வேட்பாளருக்கான போட்டியில் ரினி சம்பத் பங்கேற்கிறார். இதற்கு தேவையான கட்சியின் 4,500 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார். அந்த வகையில், வாஷிங் டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசியப் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை கடந்த 50 ஆண்டுகளாக மேயர் தேர்தலில் ஜன நாயக கட்சியினரே வென்றுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *