திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூந்தலூர் பகுதியில் நேற்று (3.4.2026) திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.அய் கட்சியைச் சார்ந்த நெல்லை முபாரக் அவர்களை அறிமுகம் செய்தும், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் நன்னிலம் வேட்பாளர் முகமது முபாரக் அவர்களை வரவேற்று செயல் வீரர்கள் கூட்ட மேடையில் பயனாடை அணிவித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து திராவிடர் கழகம், தி.மு.க., எஸ்.டி.பி.அய்., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தங்களது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கோரிக்கை விடுத்தனர்.
ஓசூர் தி.மு.க. வேட்பாளருடன்
கழகத் தோழர்கள் சந்திப்பு

திமுக வெற்றி வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா அவர்களை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களான பொதுக் குழு உறுப்பினர்கள் அ.செ.செல்வம்,கோ.கண்மணி, மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, துணைச் செயலாளர் ச.எழிலன்,ஈரோடு பாண்டியன், சிவாஜி, மாநகர தலைவர் து.ரமேஷ், இளைஞரணி மாவட்ட செயலாளர் வா.செ.மதிவாணன் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் வருகின்ற 14.04.2026 அன்று மாலை 5.00மணிக்கு ஒசூர் ராம் நகரில் வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாக்காளர் மத்தியில் உரையாற்றி வாக்கு சேகரிக்க வரும் செய்தியை பகிர்ந்து கொண்டனர்.
– – – – –

2.4.2026 அன்று இரவு தண்டுபத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்டக் கழகம் சார்பில் தோழர்கள் பங்கேற்றனர்.

