அய்தராபாத், மார்ச் 30– வயதான காலத்தில் பெற்றோரை முறையாகப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்குக் கடி வாளம் போடும் வகையில், தெலங்கானா மாநில அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்ட மசோதாவை நிறை வேற்றியுள்ளது.
பெற்றோர் புறக்கணிப்பு
தெலங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தெலங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல் மசோதா, 2026’இன் படி: யார் யாருக்குப் பொருந்தும்?: அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகளுக்கும் (Political Representatives) இந்தச் சட்டம் பொருந்தும்.
பெற்றோரைப் புறக்கணிக்கும் ஊழியர் களின் மாத ஊதியத்தில் 15 சதவீதம் அல்லது 10,000 ரூபாய் (இதில் எது குறைவோ அது) கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்பட்டு பெற் றோரிடம் வழங்கப்படும்.
ஒன்றிய சட்டத்தை விட மேம்பட்டது: ஏற் கெனவே 2007இல் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூத்த குடிமக்கள் நலச் சட்டத்தை விட, இந்த மாநிலச் சட்டம் அதிக அதிகாரமும் பரந்துபட்ட எல்லையும் கொண்டது.
முதலமைச்சர்
ரேவந்தின் விளக்கம்
இந்த மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய முதலமைச்சர் ரேவந்த், “மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளை களைத் திருத்துவதும், அவர்களைக் கவனித்துக் கொள்ள வைப்பதும் ஒரு சமூகப் பொறுப்பாகும். அதைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
இந்த புதிய சட்டம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெற்றோ ரைச் சுமையாகக் கரு தும் தற்போதைய சூழ லில், அவர்களுக்கு இந்தச் சட்டம் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோரை கைவிட்டால் ஊதியம் கிடையாது! தெலங்கானா சட்டப்பேரவையில் அதிரடி மசோதா. தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும்! பெற்றோரைப் பராமரிக்கத் தவறினால் 15 சதவீதம் ஊதியப் பிடித்தம்.
முதியோர் நலனில் அக்கறை:
தெலங்கானா அரசின் புதிய ‘பாசக்’ கட்டளை என்று கூறி வருகின்றனர்.
