தென்மேற்கு ரயில்வேயில் பதவி உயர்வுத் தேர்வுகள் ‘திடீர்’ ரத்து! கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, மார்ச் 19 தென்மேற்கு ரயில்வேயில் நடைபெற இருந்த 295 பணிக்கான பதவி உயர்வுத் தேர்வை ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது.

இதற்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்வே தேர்வுகளை கன்னடத் தில் எழுதும் வசதியுடன் விரை வில் நடத்த வேண்டும் என சித்த ராமையா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: ‘தென்மேற்கு ரயில்வேயில் 194 சரக்கு ரயில் மேலாளர் பணியிடங்களுக்கும், ஹுப்பள்ளி பிரிவில் 101 எல்டிசிஇ பணியிடங்களுக்கும்   நடைபெறவிருந்த பதவி உயர்வுத் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இது கன்னட ஊழியர்களிடையே பெரும் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. கன்னடியர்கள் மற்றும் கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளைக் கன்னட மொழியில் எழுத அனுமதி வழங் கப்படாதது குறித்து ஆயிரக் கணக்கான கன்னட ஊழியர்கள் ஏற்ெகனவே ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும், ரயில்வே துறை சரியான நேரத்தில் பதில ளிக்கத் தவறிவிட்டது. கடைசி நேரத்தில் தேர்வுகளை ரத்து செய் திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே துறை முன்கூட்டியே செயல்பட்டு, கன்னட மொழியில் தேர்வு எழுத அனுமதித்திருந்தால் இந்தச் சூழலைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், துறையின் அலட்சியப் போக்கும், போராட்டங்கள் தீவிரமடைந்த பிறகு கடைசி நிமிடத்தில் தேர்வை ரத்து செய்ததும் கண்டிக்கத்தக்கது.

ஒன்றிய அரசுத் தேர்வுகளில் கன்னடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது முதல் முறையல்ல, இது தொடர்கதையாகி வருகிறது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதால், கன்னட மொழி விண்ணப்பதாரர்கள் நீண்டகாலமாகவே பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.

ஒன்றிய அரசு ஹிந்திக்கு முன்னுரிமை அளிப்பதாலும், பிராந்திய மொழிகளைப் புறக்கணிப்பதாலும் ஏற்படும் பாதிப்புகளைக் கன்னடர்கள் ஏற்ெகனவே உணர்ந்துள்ளனர். ஒன்றிய அரசுத் தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவது ஏற்புடையதல்ல.

இந்தியா என்பது மொழி அடிப்படையில் அமைக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியம். நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் கன்னடத்தின் மீது ஹிந்தி திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

கன்னடர்கள் வேலைவாய்ப் பையோ அல்லது பதவி உயர்வையோ பிச்சையாகக் கேட்கவில்லை; தாங்கள் பயின்ற மொழியிலேயே தேர்வு எழுதுவது தங்களின் உரிமை என்றே வலியுறுத்துகிறார்கள்.

கன்னடம் பேசும் விண்ணப்ப தாரர்களுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை ஒன்றியஅரசு உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிட்டுத் தேவையான உத்தரவு களைப் பிறப்பிக்க வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட தேர்வு களைக் கன்னட மொழியில் எழுதுவதற்கான வசதியுடன் கூடிய விரைவில் மீண்டும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *