‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் நிதி நிலுவையில் உள்ளதா? மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி! உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அரசு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச்.13 மக்களவையில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி நிலுவை குறித்து தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.

சமக்ர சிக்ஷா திட்டம்

2024––-2025ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஒன்றிய நிதி நிலுவையில் உள்ளதா? கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட, வழங்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள நிதி விவரங்கள் என்ன?

மேலும், சுமார் ரூ.3,548 கோடி தொகை தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுவது உண்மையா? இதில் 2024-20–25ஆம் ஆண்டுக்கான ரூ.2,152 கோடி பங்கும் அடங்குமா? தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துதல் அல்லது பிஎம் சிறீ (PM SHRI) திட்டத்தில் இணைவது போன்ற நிபந்தனைகள் சமக்ர சிக்ஷா திட்ட நிதி விடுவிப்புடன் தொடர்புள்ளதா? மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளிக் கல்வி திட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சகத் தின் இணை அமைச்சர் ஜெயந்த் சவுதரி அளித்த பதில் வருமாறு:

கல்வி என்பது இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள துறையாகும். தேசிய கல்விக் கொள்கை  2020 நாட்டின் கல்வி அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் சமக்ர சிக்ஷா திட்டம் (என்இபி) NEP 2020க்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.

பிஎம்சிறீ (PM SHRI) திட்டம் 2022ஆம் ஆண்டு தொடங்கப் பட்டதாகவும்,  என்இபி NEP 2020 கூறுகளை எடுத்துக்காட்டும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவதே அதன் நோக்கம் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாடு அரசு பிஎம்சிறீ (PM SHRI) திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

மேலும், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஆண்டு வேலைத் திட்டம் மற்றும் பட்ஜெட் (AWP&B) ஒப்புதல், பயன்பாட்டு சான்றிதழ்கள், கணக்காய்வு அறிக்கைகள், மாநில பங்கு உள்ளிட்ட நடைமுறை களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு என்இபி (NEP) 2020அய் முழுமையாக அமல்படுத்தவில்லை என்றாலும், மாணவர்களின் கல்வி தேவைகளை கருத்தில் கொண்டு ‘RTE Entitlements’ கூறின் கீழ் ஒன்றிய நிதி விடுவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, ரூ.538.39 கோடி ஒன்றிய பங்கு தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 2024––-2025ஆம் ஆண்டுக்கான ரூ.362.81 கோடியும், 2025––– -2026ஆம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் தவணையாக ரூ.175.58 கோடியும் அடங்கும்.

கடந்த மூன்று ஆண்டு களில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட ஒன்றிய நிதி விவரங்கள்: 5.3.2026 நில வரப்படி,

2023-20–24:ஒதுக்கீடு ரூ.2,120.25 கோடி; விடுவிப்பு ரூ.1,871.96 கோடி.

2024–-2025: ஒதுக்கீடு ரூ.2,151.59 கோடி; விடுவிப்பு ரூ.362.81 கோடி (2025-20–26இல் விடுவிப்பு).

2025-20–26: ஒதுக்கீடு ரூ.1,896.42 கோடி; விடுவிப்பு ரூ.175.58 கோடி மீதமுள்ள நிதி வழக்கமான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின் விடுவிக்கப் படும் என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *