செந்துறை, மார்ச் 13- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ‘திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்..’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது.
10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் செந்துறை பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் தலைமையேற்க, ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார்.
மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் இரத்தின இராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் வெ.இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் லெ.தமிழரசன்,மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஆ.இளவழகன் பெரியார்பெருந்தொண்டர் பெ.கோ .கோபால், சி.கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாவட்டத் துணைச் செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் தா.மதியழகன் மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன்,
காப்பாளர் சு.மணிவண்ணன் மாவட்ட தலைவர் விடுதலை .நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார் திராவிடமாடல் அரசு தொடர வேண்டியதன் அவசியத்தையும், திமுக அரசு செய்துள்ள சாதனைகளையும் கொள்கை பூர்வமாக திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்றும்விளக்கி சிறப்புரையாற்றினார் .
ஒன்றிய துணைச் செயலாளர் த.சுப்பராயன் நன்றி கூறினார் .
மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் வி. சிவசக்தி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் செ. ராதிகா, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக. முருகன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் வஞ்சிணபுரம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் க.தனபால் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக காலை 10 மணியளவில் அன்னை மணியம் யாரின் பிறந்த நாளை முன்னிட்டு செந்துறை பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
